அகில உலகில் அற்புத கட்டுமானம் "பனாமா
கால்வாய்". உலகின் ஏழு பழம்பெரும் அதிசயங்களில் ஒன்றென பலகாலம்
போற்றப்பட்டது "பனாமா கால்வாய்". உலக வரலாற்றில் என்றுமில்லாதவாறு
கட்டுமான காலத்தில் பல ஆயிரம் மனித உயிர்களை பலிகொண்டது "பனாமா
கால்வாய்". பலநூறு வருடங்களாக மனிதன் இயற்கையுடன் போராடி வெற்றி
கொண்டதன் சின்னம் "பனாமா கால்வாய்". அமெரிக்க ஏகாதிகத்தின் அடையாளம்
"பனாமா கால்வாய்". மனித வரலாற்றிலே விடாமுயற்ச்சி வெற்றிதரும் என்பதற்கு
மிகச்சிறந்த உதாரணம் "பனாமா கால்வாய்". இவ்வாறு விபரிக்கமுடியாத பலபரிமாண
புகழ்ச்சியினதும் இகழ்ச்சியினதும் சிகரமாக "பனாமா கால்வாய்" உள்ளதனை
"பனாமா கால்வாய்" பற்றிய முழுமை விபரம் அறிந்தவர் விபரிக்கும் விதமாகும்.
பனாமா கால்வாயின் வரலாறு 1524ம் வருடத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. ஸ்பானியரின் கட்டுப்பாட்டில் தென்னமெரிக்க நாடுகள் இருந்தகாலத்தில் கடல்மார்க்கத்தில் பொன்னையும் பொருளையும் குறுக்குவழி மார்க்கமாக சேர்ப்பதில் தேடிய பாதையின் விளைவுதான் கால்வாய்க்கு முதல்முதலில் வித்திட்டது. அனைத்து நாடுகளிலும் இருந்து சூறையாடப்பட்ட திரவியங்களை பத்திரமாகவும் குறுகியகாலத்திலும் சேர்க்கவும் வேண்டி ஸ்பானிய மன்னரின் (Charles V) உத்தரவில் திட்டமிடல்கள் 1529ம் வருடத்தில் முடுக்கிவிடப்பட்டு கால்வாய் வேலைகள் 1534ம் வருடம் தொடங்கிய வேகத்தில் கைவிடப்பட்டது. திட்டம் கைவிடப்பட்டதற்கு ஐரோப்பியாவில் உருவான போர் ஒரு காரணமாக இருந்தபோதிலும் கால்வாய் அல்லது குறுக்குவழி சாத்தியமின்மை தெளிவானது முதன்மை காரணியாகும். இருந்தபோதிலும் பலநூறு வருடங்களின் பின்னர் பல ஆயிரம் உயிர் இழப்புக்களுடனும் பொருட் செலவுடனும் கால்வாய்க்கான கனவு நனவாகியிது வரலாற்றில் பதிவாகியது.
தற்போது பனாமா கால்வாய் அமைந்துள்ள பிரதேசமானது உலகில் மிக அதிக மழைவீழ்ச்சியையும் அடர் காடுகளையும் கொண்ட கரடு முரடான பிரதேசமாகும். பூகோளரீதியில் மலைகளையும் அருவிகளையும் ஆறுகளையும் நீர்நிலைகளையும் பெருமளவில் கொண்டுள்ள இப்பிரதேசம் உலகில் அபாயகரமான விஷஜந்து, ஊர்வன என்பவற்றின் புகலிடமாகவும் உள்ளது. இத்தனை ஆபத்து நிறைந்த ஒருபகுதி கால்வாய் அல்லது குறுக்கு பாதைக்காக தெரியப்பட்டதன் காரணம் அதன் பூகோளரீதியிலான அமைவிடமாகும். மேலும் குறுக்குவழி திட்டத்தில் பனாமாவை ஒத்த அமைப்புடன் சற்று நீளமான பகுதி நிக்கரகோவா (Nicaragua) நாட்டினூடும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கால்வாய்க்கான முயற்சி காலத்திற்கு காலம் பல திட்டமிடலில் தொடர்ந்த வண்ணம் இருந்தது. இவற்றில் குறிப்பிடத்தக்கனவாக 1670ம் வருடம் பல ஆயிரம் அடிமைகளுடன் மீளவும் ஸ்பானியர் முயர்ச்சி பல ஆயிரம் உயிரிழப்புடன் நிறுத்தப்பட்டது. பிரித்தானிய இராச்சியம் 1770 ம் வருட காலத்தில் இருந்து படிப்படியான ஆதிக்கத்தினை தொடர்ந்து 1801ம் வருடத்திலிருந்து 1804ம் வருடகாலத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து செயற்பட இருந்த கட்டுமானம் ஸ்பானியர்களால் நிறுத்தப்பட்டது. 1813ம் வருடத்தில் ஸ்பானியர்களால் சுதந்திரமான பனாமா பிரதேசம் 1836ம் வருடம் பிரஞ்சு நிறுவனத்திற்கு கால்வாய், புகையிரதப்பாதை அமைக்கும் உரிமையினை 99வருட குத்தகையில் வழங்கியது. பிரஞ்சு நிறுவனமானது 10 வருடம் மேலான கட்டுமானத்தில் பாரிய நஸ்டமடைந்ததுடன் பல ஆயிரம் உயிர்ப்பலிகளையும் கொடுத்தபோதிலும் 1855ம் வருடமளவில் புகையிரத பாதையினை $7 மில்லியன் செலவில் பூர்த்தியாக்கியது. இதனிடையே 1852இல் பிரித்தானியா கால்வாய் அமைப்பு திட்டத்தில் ஆர்வம்காட்டியதுடன் மட்டும் நிறுத்திக்கொண்டது. கால்வாய் தொடர்பில் 1850ம் -1875ம் ஆண்டு காலத்தில் பலவித திட்டமிடல்கள் நிபுணர் குழுக்களினால் முன்னெடுக்கப்பட்டு இரு கால்வாய்க்கான சாத்தியமான பிரதேசங்கள் பரிந்துரைக்கப்பட்டது. மீண்டும் வேறொரு பிரஞ்சு நிறுவனம் ரஸ்யாவின் பின்னணியுடன் பனாமா கால்வாய் கட்டுமானத்தினை 1881ம் வருடம் ஆரம்பித்து 1888ம் வருடம் வழக்கம்போல் பல ஆயிரம் மனித உயிரிழப்புடன் பொருட்செலவுடன் ($180 மில்லியன் மேல்) 18 மைல் தூர கால்வாய்த்திட்டம் பூர்த்தியான நிலையில் 1889இல் அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் நிலைக்குள்ளானது. இதனிடையே பனாமா கால்வாய் விடையத்தில் பல நாடுகளும் விரல்களை சுட்டு மூக்கு உடைபட்டநிலையில் அமெரிக்காவின் நலனுக்கும் கேந்திரத்திற்கும் கால்வாய் தடுக்கமுடியாத ஒன்றாக இருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவானது அரசியல் காய்நகர்த்தல் மூலம் நிக்கரகோவா (Nicaraguva) நாட்டினூடு கால்வாய் அமைக்கும் வேலைகளை 1889ம் வருடம் தொடங்கியது. மேற்படி திட்டம் அமெரிக்க அரசின் $250 மில்லியன் செலவில் தயாரானது பிரஞ்சு நிறுவனத்தின் வயிற்றில் புளிகரைத்தது. ஏனெனில், பனாமா கால்வாய் பாதிவழியில் நிறைவான நிலையில் பொறுப்பெடுக்கும் தகுதி அமெரிக்கா தவிர வேறு எந்த ஒருநாட்டிற்கும் அக்காலத்தில் இருக்கவில்லை. மேலும் 1849ம் வருடத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலத்தில் அகழப்பட்ட பெருமளவு தங்கமானது அமெரிக்காவின் என்றுமில்லாத செல்வக் கொழிப்புக்கு காரணமாக இருந்ததுடன் தங்கத்தினை எடுத்துச்செல்வதில் கால்வாய் தடுக்கமுடியாத ஒன்றாகவும் மாறியது குறிப்பிடத் தக்கனவாகும்.
நிக்கரகோவா கால்வாயா? பனாமா கால்வாயா? எது சிறந்தது.(கட்டுரையில் இந்த கேள்வி மிகவும் காலம் கடந்தது என்றாலும் அமெரிக்கவின் முனைப்பு இதனை இப்போதுதான் முடுக்கியுள்ளது.)
நிக்கரகோவா நாட்டின் டரியன் (Darien) கால்வாய் பகுதி 194 மைல் நீளம்.சராசரி ஆண்டு மழைவீழ்ச்சி 140 அங்குலம்.
கொலம்பியா நாட்டின் பனாமா (Panama) கால்வாய் பகுதி 51 மைல் நீளம்.சராசரி ஆண்டு மழைவீழ்ச்சி 265 அங்குலம்.
ஏனெனில், கடல்மட்ட கால்வாய் திட்டம் மனிதனால் சாதிக்கப்படமுடியாத ஒன்றாக அனுபவ தோல்விகளில் இருந்து தெளிவானது. இந்த நிலையில் நீர்த்தேக்கிகள் மூலமான மூடித்திறக்கும் வழி மூலம் கப்பல்களை ஏற்றி இறக்கும் திட்டம் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு நிக்கரகோவா பூகோள ரீதியில் மிகவும் ஏதுவாக இருந்ததுடன் அமெரிக்க அரசியலுக்கும் அப்பிரதேசம் ஒத்துப்போனது. ஆனாலும் அமெரிக்க அரசியல் வாதிகளிடையே இரு திட்டங்களும் சம அக்கறை அல்லது பனாமா மேல் அதிகம் அக்கறை எனினும் கொலம்பியாவின் அமெரிக்க எதிர்ப்பு நிகரகோவா மீது ஆவல்கொள்ள வைத்தது. இருந்த போதிலும் அமெரிக்க எதிர்ப்புடைய கொலம்பியா நாட்டினை பனாமா விவகாரத்தில் அடிபணிய வைப்பதில் பிரஞ்சு நிறுவனம் ஈடுபட்டது. பிரஞ்சு நிறுவனத்தின் பருப்பு கொலம்பியா நாட்டில் வேகாத வேளையில் நிக்கரகோவா பகுதியில் நிகழ்ந்த எரிமலை அமெரிக்காவினை இரண்டாம் தரம் பனாமா பற்றி சிந்திக்கத்தூண்டிய போதிலும் கொலம்பியா அரசியல் தடையானது. இந்த தடைகளை உடைத்து தனது நஸ்டத்தின் சிறு பகுதியாவது மீட்பதில் பிரஞ்சு நிறுவனம் குறியாக இருந்தது. பிரஞ்சு நிறுவனமானது கொலம்பியா நாட்டிலிருந்து பனாமா எனும் பகுதியை பிரித்தெடுக்க அமெரிக்காவுடன் இரகசிய திட்டத்தில் இறங்கி வெற்றியும் கண்டது. அமெரிக்காவானது புதிய பனாமா நாட்டில் தனது ஆதிக்கத்தினை செலுத்தி பிரஞ்சு நிறுவனமிடமிருந்து கால்வாய் கட்டுமானத்தினை 99 வருட குத்தகையில் பொறுப்பெடுத்தது. அத்துடன் $40 மில்லியன் தொகையினை பிரஞ்சு நிறுவனத்திற்கு அமெரிக்கா செலுத்திய போதிலும் இது மொத்த தொகையின் மூன்றில் ஒரு பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் கடற்படை போர்காலத்தில் 68 மணிநேரம் பயணிக்கவேண்டிய கடற்பாதையினை 8 மணிநேரத்தில் கடக்கும் வல்லமையினை மேற்படி திட்டம் உருவாக்கியதில் அமெரிக்கா மிகவும் ஆர்வமாக இருந்தது. அத்துடன் பொருளாதார, வர்த்தக, பிராந்திய நலனுக்கும் மிகவும் முக்கிய ஒன்றாக பலகாலமாக அமெரிகாவினால் சிந்திக்கப்பட்ட திட்டமாகவும் இருந்தது. மேற்படி கால்வாய் அமைப்பு காலம்காலமாக பல நாடுகளினாலும் முன்நெடுக்கப்பட்டு பூர்த்தியாக்கப்பட்ட மெரும்பாலான வேலைகளும் தவறுகளும் அமெரிக்காவுக்கு சாதகமாகின. இதேவேளையில் பனாமா தொடர்பில் அமெரிக்காவின் அரசியல் தருணம் பலவும் அத்துமீறல்களாக வெளிப்படயாக இருந்தபோதிலும் அதன் வல்லாதிக்கம் பலநாடுகளையும் கட்டிப்போட்டிருந்தது.
பனாமா கால்வாய் கட்டுமானத்தில் பல ஆயிரம் மனித உயிர்கள் பலியாவதற்கு தொற்று நோயும் பாரிய இயந்திரங்களும் முக்கிய காரணமாக இருந்ததால் அவற்றிற்கு முடிவு கட்டுவதில் அமெரிக்கா தீவிரமாக முனைப்புக் காட்டியது. மலேரியா, மஞ்சள் காச்சல் என்பன நுளம்பினால் பரவுவது 1990 களில் கண்டறியப் பட்டதுடன் தடுப்பு மருந்துகளும் முதல்முதலாக பாவனைக்கு வந்தன. மேலும் நீரவியில் இயங்கும் இயந்திரங்களின் கண்டுபிடிப்பு, பனாமா புகையிரத சேவை என்பன அமெரிக்க திட்டத்தில் புதிய பரிமாணத்தினையும் நம்பிக்கையும் கொடுத்தது. அத்துடன் மனித வரலாற்றில் என்னுமில்லாதவாறு பெருமளவிலான வெடிபொருட்களையும் (டைனமைற்), உயர் காற்று அமுக்கத்தில் இயங்கும் துளையிடும் சாதனங்களையும் பாவித்து கால்வாய் கட்டுமானத்தினை பூர்த்தியாக்கியது மிகவும் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களாகும்.
ஒற்றை பாதையில் இயங்கிய பனாமா புகையிரத
சேவையினை இருபாதைகளில் 1907 க்கு முன்பதாக இயக்கவைப்பதில் அமெரிக்கா
புனைப்புகாட்டியது. ஏனெனில், அகழப்படும் மண், பாறை என்பவற்றினை
எடுத்துச்செல்வதற்கு உதவியாக இத்திட்டம் முன்வைக்கப்பட்டது. மேலும்
அமெரிக்கா கால்வாய் கட்டுமானத்தில் 44,000
மேலான தொழிலாளர்களை தினமும் அமர்த்தியது முக்கிய செய்தியாகும்.
அமெரிக்கா பயன்படுத்திய துளையிடும் காற்றமுக்க (Compressed air)
கருவிகளாவன தினமும் 60 மைல் நீளத்திற்கு சமமான சிறு துளைகளை துளையிட்டு
வெடி மருந்து (டைனமைற்) பொருத்துவதற்கு உதவின. மேற்படி துளையிடும்
கருவிக்கான முதன்மை பிறப்பாக்கிகள் ஒவ்வொன்றும் கால்வாயின்
திட்டப்பாதையின் இருமருங்கிலும் மையத்திலும் என மூன்று இயங்கின. இவை
ஒவ்வொன்றும் 9மைல் நீளமான குளாய்களினால் தொடுக்கப்பட்டும் இருந்தமை
குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவானது பிரஞ்சினை விடவும் பலவித யுக்தியுடனும்
உக்கிரமாகவும் கால்வாயின் கட்டுமானத்திட்டத்தில் தீவிரமாகச்செயற்பட்டு 1914ம் வருடம் ஆகஸ்டு 15 ம் திகதி வெற்றிகரமாக நிறைவுசெய்தது வரலாற்றில் மிகப்பெரும் மகா சாதனையாக போற்றப்படுகின்றது.
No comments:
Post a Comment