ABL யைப் பற்றி.........


1 முதல் 4 வரை படிக்கும்
மாணவர்களுக்கு வண்ணங்களாலான
அட்டை வழங்கப்பட்டுள்ளது.
1 ம் வகுப்பு - சிவப்பு
2 ம் வகுப்பு - பச்சை
3 ம் வகுப்பு - நீலம்
4 ம் வகுப்பு - மஞ்சள்
இந்த அட்டைகளில்
ஒவ்வொரு பாடத்திற்குமெனச்
சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் - விலங்குகள்
ஆங்கிலம் - போக்குவரத்துச்
சாதனங்கள்
கணிதம் - பறவைகள்
சூழ்நிலையியல் - பூச்சிகள்
சூ.சமூகவியல் - விளக்குகள்
பல சின்னங்கள் சேர்ந்தது படிநிலைகள்
எனவும், பல படிநிலைகள்
சேர்ந்தது ஏணிப்படி (LADDER ) எனவும்
அழைக்கப்படுகிறத­
ு.ஒவ்வொரு பாடத்திற்கும்
தனித்தனி ஏணிப்படி தொங்கவிடப்பட்டு­
ள்ளது. அவற்றிலுள்ள
சின்னங்களுக்கான அட்டைகள் 'Plastic
Tray'யில் சின்னம் வாரியாக
அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
மாணவன் ஏணிப்படியில் சின்னத்தைப்
பார்த்து அதற்குரிய அட்டையை Plastic
Tray'யில் போய் எடுத்து அந்த சின்னம்
எந்த குழுவில்
அமைந்துள்ளதோ அங்கு போய்
அமரவேண்டும். மொத்தம் 6
குழு அட்டைகள் தனித்தனியாகப்
போடப்பட்டிருக்கும்.
1 வது குழு - ஆசிரியரின்
முழுமையானத் துணையுடன்
இயங்கும் ( இது 6 வாரம் மட்டும்
இருக்கும் )
2 வது குழு - ஆசிரியரின்
முழுமையானத் துணையுடன்
இயங்கும்.
3 வது குழு - ஓரளவு ஆசிரியர்
உதவி தேவைப்படும்.
4 வது குழு - சக மாணவர்
உதவி செய்யும் குழு.
5 வது குழு - ஓரளவு சக மாணவர்
உதவி தேவைப்படும் குழு.
6 வது குழு - தானே கற்றல் குழு.
வகுப்பறை நிர்வாகம் :
- ஒவ்வொரு குழுவிற்கும்
தனித்தனியாகப் பாய்கள்
போடப்பட்டிருக்க வேண்டும்.
- கீழ்மட்டக் கரும்பலகை இருக்க
வேண்டும்.ஒவ்வொரு பகுதியாகப்
பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மாணவனை அதில் எழுத அனுமதிக்க
வேண்டும். அதைத் திரும்பப்
பயன்படுத்தும்
வரை அவற்றிலுள்ளதை அழித்தல்
கூடாது.
- கம்பி பந்தல் -
இது ஆசிரியருக்கு எட்டும்படி அமைத்தி
வேண்டும். மாணவனின்
படைப்பினை அதில் தொங்கவிட
வேண்டும். அதில் ஆசிரியர் தேதியுடன்
கையொப்பமிட்டிருக்கவேண்டும்.
- சுய
வருகைப்பதிவேடு இருக்கவேண்டும்
ஆரோக்கிய சக்கரம் இருக்கவேண்டும்.
- காலநிலை அட்டவணை பயன்படுத்த
வேண்டும்.
- முன்புறம் சின்னங்கள் ஒட்டப்பட்ட
'Plastic Tray'
வைப்பதற்கு மாணவனுக்கு எட்டும்
உயரத்தில் அலமாரி இருக்க வேண்டும்.
- புத்தகப் பூங்கொத்து தனியாகப்
பயன்பாட்டில் இருக்கவேண்டும்.
ஒவ்வொரு பள்ளிக்கும்
நூற்றுக்கணக்கானப் புத்தகங்க்கள்
வழங்கப்பட்டுள்ளன.
- கணிதப்பாடதிற்கென SALM Kid box
வழங்க்கப்பட்டுள்ளது.
ABL'ன் பயன்கள்:
- குழந்தைகள் அவரவர்
வேகத்திற்கு கற்க முடியும். சில
நாட்கள்
பள்ளிக்கு வரவில்லையென்றாலும்
அந்த மாணவர் எந்த அட்டையில்
விட்டுச்சென்றாரோ அதைத்
திரும்பவும் தொடர முடியும்.இதனால்
மாணவருக்கு எந்தத் திறனும்
விடுபடாது.
- கற்றல் அட்டைகள் ஆர்வம்
ஊட்டுவதாகவும், கவர்ச்சிகரமாகவும்
உள்ளது.
- ஆசிரியருக்கும் மாணவருக்குமுள்ள
இடைவெளி குறைய வாய்ப்புள்ளது.
- புதியக் கற்றல் உத்திகள்
செயல்படுத்தப்படுகின்றன.
- ஆசிரியர் தன் நேரத்தைக் கற்றலில்
குறைபாடுடைய குழந்தைக்கு ஒதுக்க
முடியும்.
- மாணவனுக்குத் தேர்வின் பயம்
போக்கப்படுகிறது. அவனையறியாமல்
தேர்வு எழுத
வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதக அம்சங்கள் :
இது ஒரு நல்ல திட்டமாக இருந்தாலும்
பாதக அம்சங்களும் உள்ளன.
ஆசிரியர்களும் பொதுமக்களும்
கீழே உள்ள
கருத்துக்களை கூறுகின்றனர்.
- வயதான ஆசிரியர்கள்
கீழே அமர்ந்து கற்றுக் கொடுப்பதில்
பிரச்சினை உள்ளது.
- ஆசிரியர்கள் முழுமையாக
மாணவர்களைப் பார்வையிட
முடிவதில்லை.
- பெரும்பாலான ஆசிரியர்களின்
குற்றச்சாட்டு இன்றைக்கு என்ன
கற்றுக் கொடுத்தோம் என்ற
திருப்தியில்லை.
- இது ஒரு நல்ல திட்டம் என்றால் ஏன்
அனைத்து விதமான பள்ளிகளும்
(MATRIC, ANGLO INDIAN போன்றவை)
அமல்படுத்த
நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த
பள்ளிகளில் பயிலும் மாணவர்களையும்
STATE BOARD'ல் பயிலும்
மாணவர்களையும் எவ்வாறு தரம்
பிரிப்பது?
- அட்டைகள் மட்டும் கற்பிக்க
போதுமென்றால் புத்தகங்கள் ஏன்
வழங்கப்படுகின்றன.
அல்லது அட்டைகளில் உள்ள
கருத்துகளையே புத்தகத்திலும் ஏன்
இடம் பெறச்செய்யவில்லை.
- இது ஒரு நல்ல திட்டம் என்றால்
STATE BOARD பள்ளிகளில்
மாணவர்களின் எண்ணிக்கை குறையக்
காரணம் என்ன?
- சமச்சீர் புத்தகத்திலேயே அதிகமான
பாடக்கருத்துக்கள் உள்ள
போது இதையும்
சேர்த்து எவ்வாறு நடத்துவது?
எது எவ்வாறு இருப்பினும் மாணவர்
நலன் ஒன்றையே கருத்தில்
கொண்டு அரசு செயல்படுத்தும்
திட்டத்தை கொண்டு சேர்ப்பதே சிறந்த
ஆசிரியரின் கடமையாகும்.

No comments:

Post a Comment